புதன், 15 டிசம்பர், 2010

இனிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

நமது ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக சென்ற ஆண்டு பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்ட சங்கமம் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியதை அறிந்திருப்பீர்கள் .

இந்த ஆண்டும் வருகின்ற டிசம்பர்-26ம் தேதி ஈரோட்டில் சங்கமம்-2010 நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திட திட்டமிட்டு வருகிறோம்.

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பதிவர்கள், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்து வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பதிவர்கள் தங்களை ஈரோடு தமிழ் வலைப்பதிர்வகள் குழுமத்தில் இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

குழும உறுப்பினர்களிடையேயான தகவல், கருத்து பரிமாற்றங்களுக்காக ”ஈரோடு தமிழ்” என்ற மின் மடல் குழுமம் இயங்கிவருகிறது.

இது வரை தங்கள் வலைப்பக்கத்தை, மின்னஞ்சல் முகவரியை குழுமத்தில், இணைக்காத பதிவர்கள் erodetamizh@gmail.com என்ற மின்மடல் முகவரிக்கு தங்கள் வலைப்பூவின் முகவரி , மின்னஞ்சல் முகவரி மற்றும் தங்களைப் பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டுகிறோம்.

முக்கியமாக,
நிகழ்ச்சி குறித்து தங்கள் வலைப்பக்கங்களில் எழுத அன்போடு வேண்டுகிறோம், நட்பில் இருக்கும் பதிவர்களோடு தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு அவர்களின் வருகையை உறுதிப்படுத்திடவும் வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ஆரம்பித்து, மாலை 5 மணி அளவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாலை 6 .00 மணிக்கு வலைப்பக்கம் எழுதுவது குறித்த பதிவர்கள் அல்லாதோருக்கு, வலைப்பக்கம் துவங்குவது குறித்த பயிற்சி வகுப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம், நிகழ்ச்சி நிரல் மற்றும் அனைத்து விபரங்களும் அடுத்த சில நாட்களில் தெரிவிக்கப்படும்.

நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திட உங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாடுகிறோம்!

நன்றி
சதீஸ்குமார்(வசூல்ராஜா) இனிய நண்பர்களுக்கு,

சதீஸ்குமார்(வசூல்ராஜா)